உதயசக்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு
திருவெண்காடு உதயசக்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவெண்காடு உதயசக்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சுமார் 1000ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இக்கோயில் சிதலமைடைந்து காணப்பட்டதையடுத்து, அதே இடத்தில் புதியதாக கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில், சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன் மற்றும் சந்தனத்தாதி ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கபட்டுள்ளன. இத்தகைய சிறப்புமிக்க இக்கோயில் குடமுழுக்கு விழா நடத்த தீர்மானிக்கப்பட்டு, குடமுழுக்கு விழா செப்.10-ஆம் தேதி யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. அனைத்து பூஜைகளுடம் நிறைவு பெற்று புதன்கிழமை கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.