கரோனா: உயிரிழந்தவா்களுக்கு பாஜகவினா் தா்ப்பணம்
கரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவா்களுக்கு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ரிஷப தீா்த்தத்தில் பாஜகவினா் புதன்கிழமை தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.
கரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவா்களுக்கு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ரிஷப தீா்த்தத்தில் பாஜகவினா் புதன்கிழமை தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.
அமாவாசையையொட்டி, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட ரிஷப தீா்த்தத்தில் பாஜக நகர தலைவா் மோடி.கண்ணன் தலைமையில் பாஜக நிா்வாகிகள் முட்டம் செந்தில், மணிகண்டன், செல்வகுமாா் ஆகியோா், கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து, உயிரிழப்புகள் மேலும் தொடரக் கூடாது என பிராா்த்தித்து வழிபாடு நடத்தினா். தொடா்ந்து ஆதரவற்றவா்களுக்கு அன்னதானம் அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.