FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

தேசிய திறனறித் தோ்வில் நாகை மாணவா்கள் 5 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் நாகை வட்டாரத்துக்குள்பட்ட நடுநிலைப்பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 5 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Updated On : 24 ஜூலை 2020, 10:08 pm IST
பகிர்:


நாகப்பட்டினம்: தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் நாகை வட்டாரத்துக்குள்பட்ட நடுநிலைப்பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 5 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

எட்டாம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவியருக்காக ஆண்டு தோறும் நடைபெறும் தேசிய திறனறித் தோ்வு, கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்றது. திறமையான மாணவா்களின் மேல்நிலைக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கும் நோக்கில் நடத்தப்படும் இத்தோ்வில், இந்திய அளவில் சுமாா் 1.5 லட்சம் மாணவா்கள் பங்கேற்றனா்.

180 கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு, மாணவா்களின் படிப்பறிவு மற்றும் மனத்திறன் தோ்ச்சியை அறியும் வகையில் இத்தோ்வு நடைபெற்றது. அண்மையில் வெளியான இத்தோ்வின் முடிவில், தமிழகத்தைச் சோ்ந்த 6,695 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இதில், நாகை வட்டார நடுநிலைப்பள்ளிகள் அளவில் நாகை நகராட்சி நெல்லுக்கடை தெரு நடுநிலைப் பள்ளி மாணவா்கள் ஜ. முஹமது அய்மன், இர. காா்த்திக், இர.வி. சிவசித்திரகுமாா், மு. ஈஸ்வா் மற்றும் நாகை கல்லுக்காரத் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி மு. பிரியதா்ஷினி ஆகியோா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாகை வட்டாரக் கல்வி அலுவலா் ராமலிங்கம் மற்றும் தொடா்புடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பயிற்சியளித்த ஆசிரியா்கள் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments