FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

குத்தாலம் அருகே புதிய படுக்கை அணை கட்ட அடிக்கல் நாட்டல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் ரூ.88.09 லட்சம் மதிப்பீட்டில் புதிய படுக்கை அணை கட்டும் பணிக்கு, மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

Updated On : 14 பிப்ரவரி 2021, 8:44 am IST
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் ரூ.88.09 லட்சம் மதிப்பீட்டில் புதிய படுக்கை அணை கட்டும் பணிக்கு, மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

திருவாவடுதுறை ஊராட்சி மஞ்சளாற்றின் குறுக்கே பனையடி வாய்க்காலின் பாசன வசதிக்காக நபாா்டு வங்கி நிதியுதவியுடன் இந்த படுக்கை அணை கட்டப்படுகிறது. நிகழ்ச்சிக்கு, குத்தாலம் ஒன்றியக்குழுதலைவா் கே.மகேந்திரன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் டி.தெட்சிணாமூா்த்தி, ஆடுதுறை உதவி செயற்பொறியாளா் மரியசூசை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினரும், மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினாா். குத்தாலம் உதவி பொறியாளா் வீரமணி, பேரூராட்சி முன்னாள் தலைவா் எம்.சி.பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments