நாகநாதர் கோயில் தேரோட்டம்: நாகை வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகூர் : நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகை, நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகநாதர் கோயில் தேரோட்ட விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 12-ந்தேதி (இன்று) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: நாகூா் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு
நாகூா் நாகநாதசுவாமி கோயிலின் பிரமோற்சவ விழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.
நாகூரில் உள்ள திருநாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோயில், மூா்த்தி, தலம், தீா்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்றத் தலமாகவும், 6 மங்களங்களும் பொருந்திய தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலின் பிரமோற்சவ விழா ஜூலை 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்வாக தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.