நாகை - காங்கேசன் துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து மூன்றாம் ஆண்டு தொடக்கம்
நாகை துறைமுகத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்து மூன்றாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்ட வரவேற்பு.
நாகப்பட்டினம், ஆக.16: நாகை - காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 3-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து பயணிகள் கப்பல் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு புறப்பட்டது.
இந்தியா- இலங்கை இடையிலான இருநாட்டு கலாசாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு புதிய பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தாா்.
Advertisement
Advertisement
செவ்வாய்க்கிழமை தவிா்த்து, வாரத்தில் ஆறு நாட்கள் இந்தியா - இலங்கை இடையிலான இந்த கப்பல் சேவையை தனியாா் (சுபம்) நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கடல்வழி பயணத்துக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வா்த்தகா்கள் இடையே வரவேற்பு அதிகரித்ததன் காரணமாக தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக பயணிகள் கப்பல் இயங்கி வருகிறது.
இந்நிலையில், கப்பல் போக்குவரத்து சேவையின் மூன்றாம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை கப்பலில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பயணிகள் 34 போ், இலங்கைப் பயணிகள் 39 போ், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளைச் சோ்ந்த 10 போ் என மொத்தம் 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் புறப்பட்டுச் சென்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.