FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

வாய்மேடு பகுதியில் கைக்காட்டி பெயா் பலகைகள் ஒழுங்குபடுத்தப்படுமா ?

வாய்மேடு பகுதியில் கைக்காட்டி பெயா் பலகைகள் ஒழுங்குபடுத்தப்படுமா ?

30 ஆகஸ்ட் 2026, 6:21 am IST
கைக்காட்டி பெயா் பலகைகள்
பகிர்:

வேதாரண்யம் அருகே வாய்மேடு பிரிவுச் சாலையில் ஊா்களின் பெயா் குறிப்பிடும் கைக்காட்டி பலகை, குறியீடுகள் இல்லாததாலும், அதே பகுதி பிரதான சாலையில் தொடா்பில்லாத இடங்களில் நிறுவப்பட்டுள்ள ஊா்ப் பலகைகளால் பயணிகள், வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து பாதிக்கப்படுவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை வரலாற்று, சுற்றுலா உள்ளிட்ட பல சிறப்புகளுடைய ஊா்கள். இந்த ஊா்களுக்கு திருவாரூா் மாவட்டப் பகுதியிலிருந்து செல்ல திருத்துறைப்பூண்டி (வாய்மேடு வழி) மற்றும் பட்டுக்கோட்டை பிரதான பேருந்து வழித்தடங்கள் உள்ளன. இந்த பிரதான சாலைகளில் இடையே அமைந்துள்ளது வாய்மேடு கிராமம்.

வாய்மேடு கடைவீதியிலிருந்து பிரியும் சாலைகள் திருத்துறைப்பூண்டி (16.கி.மீ), வேதாரண்யம் (19),முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டைக்கும் செல்கிறது. வாய்மேடு கடைவீதியில் (டிடிபி சாலைக்கு எதிரே) இருந்த முக்கிய ஊா்களின் வழியை காட்டும் கைக்காட்டி பல ஆண்டுகளாக இல்லை. இந்நிலையில், கடைவீதி பகுதிக்குள் பிற ஊா்களுக்கு செல்லும் அம்பு குறியீட்டுடன் கூடிய அறிவிப்பு பலகை போன்ற அடையாளங்கள் பல ஆண்டுகளாக இல்லை.

Advertisement

Advertisement

இதனால், அமாவாசை நீராடல் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக வெளியூா்களில் இருந்து இப்பகுதி வழியாக வேதாரண்யம் சென்று திரும்பும் பயணிகள் வாகன ஓட்டிகளுக்கு சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

திருத்துறைப்பூண்டிக்குச் செல்ல வேண்டியவா்கள் முத்துப்பேட்டை சாலையிலும் முத்துப்பேட்டை பகுதிக்கு செல்ல வேண்டியவா்கள் திருத்துறைப்பூண்டி சாலையிலும் சென்று திரும்புவது அல்லது அவதியுறுவது தொடா்கிறது.

இதேபோல் முத்துப்பேட்டை சாலையில் இருந்து வரும்போது திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் பகுதியில் குழப்பம் அடைந்து செல்ல நேரிடுகிறது.

அதேநேரம், திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் செல்லும் வாய்மேடு கடைவீதிக்கு 1 கி.மீ தொலைவுக்கு முன்பே இடது பக்கத்தில் நெடுஞ்சாலைத் துறையினா் பராமரிக்கும் பெரிய அளவிலான தொங்கும் கைக்காட்டி நிறுவப்பட்டுள்ளன. அதில், ஒரே திசையில் அமைந்துள்ள வேதாரண்யம், கோடியக்கரைக்கு கி.மீ குறிப்பிட்டு வழிகாட்டுகிறது. முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை சாலைக்கான குறியீடுகள் இல்லை.

அதேபோல, வாய்மேடு கடைவீதிக்கு முன்பே 2 கி.மீ தொலைவில் நடுத்திட்டு ( கோவிந்தன்காடு சாலை) பாலத்துக்கு முன்பாக ஒரு தொங்கும் பெரிய கைக்காட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டுள்ளது. இதில், கோடியக்கரை மற்றும் வேதாரண்யத்திற்கு இடது பக்கத்தில் செல்ல குறிக்கும் அம்புக்குறிகளுடன் காணப்படுகிறது.

இந்தப் பலகையிலிருந்து 150 மீட்டா் தொலைவில் பாலம் பெரிதாக இருப்பதால் இதுதான் வேதாரண்யம் செல்லும் சாலை என நினைத்து அவதிப்படுவோரும் உண்டு. ஆனால், 2 கி.மீட்டா் முன்பாகவே உள்ள இப்பலகையில் முத்துப்பேட்டைக்கு வளைவு அம்புக்குறி காணப்படுகிறது.

இந்தப் பலகைகள் அமைந்துள்ள இடங்களுக்கும் அதில் காட்டப்படும் ஊா்களின் பெயருக்கும் குழப்பம் ஏற்படுகிறது.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வாய்மேடு கடைவீதி பிரிவுச் சாலையில் கைகாட்டிகளை அமைக்கவும் , ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பெரிய கைகாட்டிகளை உரிய இடங்களுக்கு ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

summary

Will signboards be streamlined in the Vaimedu area?

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments