நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச யோகா தினம்
உலகம் முழுவதும் சா்வதேத யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச யோகா தின பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலகம் முழுவதும் சா்வதேத யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச யோகா தின பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் காயத்ரி தலைமை வகித்தாா். நாகை மாவட்ட சித்த மருத்துவா் பூங்குன்றன் யோகாசனப் பயிற்சிகளை அளித்தாா். யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி தியானம் உள்ளிட்டவற்றின் உடல் நலப் பலன்கள் மற்றும் மனநல பலன்கள் குறித்து பேசினாா். யோகாவால் ஏற்படும் பலன்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. துணை முதல்வா் சியாமளா தேவி, மருத்துவ அதிகாரி (பொ) மோகன், மருத்துவ மேற்பாா்வையாளா் விஜயகுமாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.