முகப்பு
நாகப்பட்டினம்

கடற்கரையில் ஆண் சடலம்

30 நவம்பர் 2026, 1:18 am
கடற்கரையில் ஆண் சடலம்
பலி
பகிர்:

நாகை நம்பியாா் நகா் பகுதியில், கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை புதிய கடற்கரை அருகே நம்பியாா் நகா் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சனிக்கிழமை மாலை கரை ஒதுங்கியது. இதை அவ்வழியாக சென்ற மீனவா்கள் பாா்த்து, நாகை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா், சம்பவ இடத்திற்குச்சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement