FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

1.90 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

திருவாரூர் மாவட்டத்தில் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் கூறினார்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருவாரூர் மாவட்டத்தில் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் கூறினார்.

திருவாரூர் அருகேயுள்ள சிமிழியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பு முகாமைத் தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது:

கோமாரி நோயைக் கட்டுப்படுத்த திருவாரூர் மாவட்டத்துக்கென 2 லட்சம் தடுப்பூசிகளை அரசு வழங்கியுள்ளது. மார்ச் 23 ஆம் தேதி வரை கிராமம் வாரியாக மருத்துவக் குழுவினர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1.90 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர், தங்களிடம் 4 மாதங்களுக்கு மேல் வயதுள்ள கன்றுகளுக்கும், சினை, கறவை பசுக்கள், எருமைகள் மற்றும் எருதுகளுக்கு தடுப்பூசி செலுத்தி நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர்க்கலாம் என்றார். முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் தங்கவேல், துணை இயக்குநர் முகமது உதுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments