தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி, குன்னூர், நேமம், வேளூர், மேலமருதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி, குன்னூர், நேமம், வேளூர், மேலமருதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் அம்பேத்கர் தலைமை வகித்தார். நகர தலைவர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சிவராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். நகர செயலாளர் வேதையன் வரவேற்றார்.
இதில், 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.