வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
மன்னார்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை, ரூ. 3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருட்டிச் சென்றிருப்பது புதன்கிழமை தெரியவந்தது.
மன்னார்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை, ரூ. 3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருட்டிச் சென்றிருப்பது புதன்கிழமை தெரியவந்தது.
மன்னார்குடி அருகே உள்ள அசேசம், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவர், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.
பின்னர், புதன்கிழமை மாலை வீட்டுக்குத் திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ. 3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்ததது.
இதுகுறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் குபேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.