FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் வியாழக்கிழமை பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களது மூன்று மாத ஊதிய நிலுவைத்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

திருவாரூரில் வியாழக்கிழமை பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களது மூன்று மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருவாரூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேசனல் பெடரேஷன் டெலிகாம் கேஷ்வல் ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மாதந்தோறும் 7 -ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும், பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்து ஒப்பந்த தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments