கூத்தாநல்லூர், வடபாதிமங்கலத்தில் 52 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளில் 52 இடங்களில்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளில் 52 இடங்களில் விநாயகர் சிலைகள் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
கூத்தாநல்லூர் வட்டத்தில் லெட்சுமாங்குடி கம்பர் தெரு, ராஜகோபால சுவாமி தெரு, மரக்கடை, அதங்குடி, வாழாச்சேரி, கோரையாறு, மஞ்சனவாடி, சித்தாம்பூர், ஓகைப்பேரையூர், தண்ணீர் குன்னம், வெள்ளக்குடி உள்ளிட்ட 27 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதேபோல், வடபாதிமங்கலத்தில் பழையனூர், கிளியனூர், வடபாதிமங்கலம், அரிச்சந்திரபுரம், ஊட்டியானி, புள்ளமங்கலம், பாலக்குறிச்சி, சேந்தங்குடி, செருவாமணி, திருநெல்லிக்காவல், கீழமணலி, கருப்பூர் உள்ளிட்ட 25 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
கூத்தாநல்லூர் வட்டத்தில், 52 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், திருவாரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் நடராஜன் மற்றும் 3 ஆய்வாளர்கள், 9 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.