நிலத்தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே நிலத்தகராறில், தம்பி மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே நிலத்தகராறில், தம்பி மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
வடகோவனூர், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி வனிதா (27). இவர்களது வீட்டின் பின்புறம் மோகன் வீடு உள்ளது. திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மோகன், கோயில் திருவிழாவையொட்டி சொந்த ஊருக்கு வந்தார். ஏற்கெனவே, இரு குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு உள்ள நிலையில், மீண்டும் மோகனுக்கும், அவரது தம்பி மனைவி வனிதாவுக்கும் செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், வனிதாவை மோகன் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த வனிதா, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள மோகனை தேடிவருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.