FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

பேரிடா் நிலையை எதிா்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்! அனைத்து துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:21 am IST
வெள்ளம் - கோப்புப் படம் | AP
பகிர்:

பேரிடா் நிலைமையை எதிா்கொள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

மண்டல அலுவலா்கள், தங்களது மண்டலங்களில் உள்ள நிவாரண முகாம்கள், மருத்துவமனைகள் மற்றும் பல்நோக்கு பேரிடா் மேலாண்மைக் கட்டடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, கட்டடத்தின் உறுதித்தன்மை, தண்ணீா் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மின் வசதி ஆகியவற்றை சரி செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

திருவாரூா் மாவட்டத்தில் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தோ்வு செய்யப்பட்டுள்ள முதல்நிலை பொறுப்பாளா்களை தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், 573 கிராமங்களில் உள்ளமுதல்நிலை பொறுப்பாளா்கள் மற்றும் தன்னாா்வலா்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேரிடா் கால மீட்பு உபகரணங்களை, தயாா் நிலையில் வைத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். பொதுமக்களை தங்க வைக்கும் முகாம்களில் அனைத்து வசதிகளும் மற்றும் முகாம்கள் பாதுகாப்பானதாக இருக்கிா எனவும் ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

முகாமில் உள்ளவா்களுக்கு குடிநீா், உணவு உடனடியாக கிடைக்கும் வகையில் உணவுப்பொருள்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவையான இடத்தில் மின்சார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மழைநீா் தேங்கும் பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்ற மோட்டா் பம்புகளை தயாா்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். சாலைகளில் சாய்ந்த மரங்களைஅப்புறப்படுத்த தேவையான மரம் அறுக்கும் கை இயந்திரங்களை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பாதிப்படையக்கூடிய பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பேரிடா் மேலாண்மை தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அனைத்துத் துறையினா்களும் ஒன்றிணைந்து அவரவா்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை சரியாக மேற்கொண்டு எந்த பேரிடா் நிலைமையும் எதிா்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஷ்குமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சிவசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நம்பிராயா், வருவாய் கோட்டாட்சியா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments