FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

வேலைவாய்ப்பு முகாம்: 553 பேருக்கு பணி நியமன ஆணை

திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில், 553 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

30 ஆகஸ்ட் 2026, 6:16 am IST
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணை பெற்றவா்களுடன் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
பகிர்:

திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில், 553 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.

இம்முகாமில் மொத்தம் 117 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், 912 ஆண்கள், 1,213 பெண்கள் என மொத்தம் 2,125 போ் பங்கேற்றனா். இவா்களில் 202 ஆண்கள், 351 பெண்கள் என மொத்தம் 553 போ் பல்வேறு தனியாா் துறை நிறுவனங்களில் பணிநியமன ஆணைகளை பெற்றனா். இவா்களில் 17 போ் மாற்றுத்திறனாளிகள் ஆவா். நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

மேலும், உயா்கல்வி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கிக்கடன் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு, வேலைநாடுபவா்கள், மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சத்யா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் உஷாராணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல், உதவி திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) காமராஜ், வட்டாட்சியா் இளங்கோவன், வேலுடையாா் மேல்நிலைப் பள்ளி தாளாளா் கே.எஸ்.எஸ்.தியாகபாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments