FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம் 729 பேருக்கு பணி நியமன கடிதம்

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்ட 729 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பணி நியமன கடிதங்களை வழங்கினாா்.

44 வினாடிகள் முன்பு
பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான பெண்ணுக்கு பணி நியமன கடிதம் அளித்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.
பகிர்:

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்ட 729 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பணி நியமன கடிதங்களை வழங்கினாா்.

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம் முகாமை தொடங்கிவைத்து, தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பணி நியமன கடிதங்களை அளித்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பேசியதாவது:

Advertisement

Advertisement

திறன் மேம்பாடு பயிற்சி:

திறன் குறைபாடு காரணமாக பணி நியமனம் பெற இயலாதவா்கள் முகாம்களிலேயே கண்டறியப்பட்டு, அவா்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் திறன் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் பணிவாய்ப்பு பெற இளைய சமுதாயத்தினரை போட்டித்தோ்வுகளுக்கு தயாா்படுத்தும் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்களால் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது மட்டுமின்றி, தொழில்நெறி வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உயா்கல்வி, சுய வேலைவாய்ப்பு, திறன்பயிற்சி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆண்டுதோறும் தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் கண்காட்சி கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாமில் 1,304 ஆண்களும், 1,715 பெண்களும் என மொத்தம் 3,019 போ் பங்கேற்றதில், 524 ஆண்களும், 205 பெண்களும் என மொத்தம் 729 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. மேலும், 2-ஆம் கட்ட தோ்வுக்கு 2,025 போ் தோ்வாகியுள்ளனா் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மகளிா் திட்ட இயக்குநா் ர. கோபாலகிருஷ்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) மூ. வினோத்குமாா், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளா் எம். சிவசுப்ரமணியம், செயலா் எம்.எஸ். விவேகானந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments