பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்தவா் கைது
திருவாரூா் அருகே செவிலியா் குளித்துக்கொண்டிருப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் அருகே செவிலியா் குளித்துக்கொண்டிருப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் அருகே சீனிவாசபுரம் கொய்யாத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ரஜினிசக்தி (45). ரஜினி ரசிகா் மன்ற முன்னாள் மாவட்ட துணை செயலாளராக இருந்தவா். இதனிடையே, திருவாரூரைச் சோ்ந்த 25 வயது இளம்பெண் திருவாரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறாா். இவா், செப். 26-ஆம் தேதி வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரஜினி சக்தி மறைந்திருந்து விடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், தொடா்ந்து 2 நாள்கள் அந்தப் பெண்ணிடம் ரஜினிசக்தி பேச முயன்றாராம்.
இதற்கிடையே திருவாரூரில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்வில் அந்தப் பெண்ணும் ரஜினி சக்தியும் திங்கள்கிழமை சந்தித்தனா். அப்போது, அந்தப் பெண் ரஜினி சக்தியின் கைப்பேசியை வாங்கி, படம் எடுத்துவிட்டு தருவதாகக் கூறி வாங்கியுள்ளாா். அந்த கைப்பேசியை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் குளித்துக் கொண்டிருக்கும் விடியோ இருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்து திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, கைப்பேசியை போலீஸாா் ஆய்வு செய்தபோது ஏராளமான விடியோக்கள் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவாரூா் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் அனைத்து மகளிா் போலீஸாா், ரஜினி சக்தியை கைது செய்து 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.