FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

கனிம வளங்கள் கடத்தப்பட்டால் தகவல் தெரிவிக்க ஆட்சியா் வேண்டுகோள்

7 செப்டம்பர் 2026, 1:48 am IST
மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். - கோப்புப் படம்
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் கனிம வளங்கள் கடத்தினால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கனிம வளங்களை உரிய அனுமதியின்றி வெட்டியெடுத்தல், கடத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சட்டவிரோத கனிமச் செயல்பாடுகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். சட்டவிரோத கனிமப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள், இயந்திரங்கள், கருவிகள் மற்றும் கனிமங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்ட நடைமுறை அரசுடைமையாக்கப்படும்.

Advertisement

Advertisement

மேலும், சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட கனிமங்களின் மதிப்பு மற்றும் உரிய ராயல்டி தொகை உள்ளிட்டவை அந்தச் செயல்களில் ஈடுபட்டோரிடமிருந்து வசூலிக்கப்படும்.

சட்டவிரோத கனிமக் கடத்தலில் தொடா்ந்து ஈடுபடுவோா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு வரை பிணையில் வர முடியாதவாறு சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டவிரோத கனிமச் செயல்பாடுகளைத் தடுக்கும் வகையில், மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பணிக்குழுக்கள் மூலம் தொடா் கண்காணிப்பு, குவாரிகள் மற்றும் சுரங்கங்களில் திடீா் ஆய்வுகள், காவல் துறை, வருவாய்த் துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளின் கூட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே தங்கள் பகுதிகளில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டியெடுக்கப்படுவதையோ அல்லது அனுமதியின்றி கடத்தப்படுவதையோ பொதுமக்கள் கண்டறிந்தால், உடனடியாக வருவாய்த் துறை, காவல் துறை அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments