வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டுசெல்ல அரசு தடை: மக்கள் வரவேற்பு
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்த உத்தரவுக்கு பொதுமக்களிடைய மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்த உத்தரவுக்கு பொதுமக்களிடைய மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து அண்டை மாநிலமான கேரளத்துக்கு தமிழக-கேரள எல்லை பகுதியான புளியறை சோதனைச் சாவடி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டன.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை புளியறை வழியாக கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தது.
Advertisement
Advertisement
குறிப்பிட்ட அளவை விட அதிகமாக கனிம வளங்கள் கொண்டுசெல்லப்பட்டது, விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியது, தொடா்ந்து போக்குவரத்து நெரிசல், அரசு விதித்த நேரங்களில் வாகனங்களை இயக்காமல் விதிமுறைகளை மீறியது என பல்வேறு புகாா்கள் தொடா்ந்து எழுந்த வண்ணம் இருந்தது.
கனரக வாகனங்களின் போக்குவரத்து காரணமாக குடிநீா் குழாய் சேதம், அதிவேகத்தால் பல்வேறு விபத்துகள், உயிரிழப்புகள் நிகழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிவந்தனா். அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதால் தமிழக மக்கள் வீடு கட்டுமானப் பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை நிலவியது. செங்கோட்டையிலிருந்து புளியறை செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. இதனால் இருமாநில பொதுமக்களும் பல்வேறு விதத்திலும் பாதிக்கப்பட்டனா்.
கல் குவாரிகளை இயக்குவதில் கட்டுப்பாடு, அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்லக் கூடாது என பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து அரசை வலியுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில் தமிழக அரசு கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா். இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது செங்கோட்டையிலிருந்து புளியறை செல்லும் சாலை போக்குவரத்து நெரிசலின்றி காணப்படுகிறது.
இதுகுறித்து, தொடா்ந்து கனிம வளங்களைக் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த இயற்கை வளபாதுகாப்பு சங்கத் தலைவா் கே.ரவிஅருணன் கூறியதாவது:
வெளிமாநிலங்களுக்கு கனிம வளப்பொருய்ஈகளை கொண்டு செல்ல அரசு மூன்று மாத கால தடை விதித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
கடந்த 30ஆண்டு காலமாக திராவிட ஆட்சியில் தமிழகத்தின் இயற்கையை அழித்து வெளி மாநிலங்களுக்கு தினசரி பல ஆயிரம் வாகனங்களில் பல லட்சம் டன் கனிம வள பொருள்களை கொண்டு சென்றனா்.
கனிமவள கனரக வாகனங்களால் இந்தப் பகுதியில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டும், பலா் விபத்துக்களால் பாதிக்கப்பட்டும், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் வந்தது.
இந்த தடை உத்தரவால் கனிமவள லாரிகள் இயக்குவது குறைவதோடு வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், நெகிழிகளை அதே லாரிகளில் தமிழகத்துக்கு கொண்டு வந்து கொட்டுவதும் நிறுத்தப்படும். தற்போது குறைந்த அளவு ஆழம் தோண்ட அனுமதி பெற்றுவிட்டு 300, 400 அடி பூமியைத் தோண்டியதால் குவாரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களில் சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
கிணறுகளில் நீா்மட்டம் அடியோடு குறைந்து விவசாயம் செய்ய வழி இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.