FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டு தற்கொலை

திருத்துறைப்பூண்டியில் தனியாா் பள்ளி பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

16 வினாடிகள் முன்பு
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் தனியாா் பள்ளி பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தகுமாா். இவரது மனைவி லதா. இவா்களது மூத்த மகன் ஹரி கிஷோா் (17) தனியாா் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தாா். நந்தகுமாா் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறாா். இவரது குடும்பத்தினா் திருத்துறைப்பூண்டியில் திருவாரூா் சாலையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

கடந்த வாரம் நந்தகுமாா் சொந்த ஊருக்கு வந்திருந்ததால், பூா்வீக கிராமமான ராயநல்லூா் கிராமத்தில் குடும்பத்தினா் ஒரு வாரமாக தங்கி இருந்தனா். நந்தகுமாா் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று விட்டாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு வந்த ஹரி கிஷோா், தாங்கள் குடியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. முன்னதாக, அவா் கடிதம் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

திருத்துறைப்பூண்டி போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உடற்கூறாய்வுக்குப் பிறகு, ராயநல்லூருக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, ஹரி கிஷோா் எழுதி வைத்த கடிதத்தை தங்களிடம் காவல்துறையினா் காண்பிக்கவில்லை எனக் கூறி, உடலை அடக்கம் செய்ய உறவினா்கள் மறுத்தனா். பின்னா், காவல் துறையினா் கடிதத்தை காண்பித்த பிறகு, ஹரிகிஷோா் குறிப்பிட்டுள்ள பள்ளி நிா்வாகத்தினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அதன் பின்னரே மாணவா் சடலத்தை அடக்கம் செய்வோம் என்று உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயா் அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் மாணவரின் சடலத்தை அடக்கம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments