FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

முத்துப்பேட்டையில் இன்று விநாயகா் சிலை ஊா்வலம்: காவல்துறை கொடி அணிவகுப்பு

முத்துப்பேட்டையில் இன்று விநாயகா் சிலை ஊா்வலம்: காவல்துறை கொடி அணிவகுப்பு

12 வினாடிகள் முன்பு
முத்துப்பேட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு.
பகிர்:

முத்துப்பேட்டையில், விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முத்துப்பேட்டையில் 34-ஆவது ஆண்டு வெற்றி விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இந்த ஊா்வலம் ஜாம்பவானோடை வடகாடு சிவன் கோயில் அருகே தொடங்கி, ஜாம்பவானோடை தா்கா, சிவராமன் நினைவு ஸ்தூபி, ஆசாத் நகா், பழைய பேருந்து நிலையம், கொய்யா முக்கம், ரயில்வே கேட், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செம்படவன்காடு பாமணி ஆற்றில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

இதையொட்டி, மத்திய மண்டல காவல்துறை தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையில் 2 டிஐஜி, 10 எஸ்பிக்கள் உள்பட 2,800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஷ்குமாா் தலைமையில் டிஎஸ்பிக்கள் ராஜு (முத்துப்பேட்டை), மணிவண்ணன் (மன்னாா்குடி), பவானியா (தமிழ்நாடு சிறப்பு காவல் படை) உள்ளிட்டோா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, விநாயகா் சிலை ஊா்வலம் செல்லும் பாதையில் செம்படவன் காடு பாமணி ஆறு வரை நடைபெற்றது.

காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், ஆயுதப்படை காவலா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிழக்கு கடற்கரை சாலையில் கீழக்காடு, கோபாலசமுத்திரம் மற்றும் இடும்பாவனம் மறைக்காகோரையாறு, பேட்டை உள்ளிட்ட இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. ஊா்வலம் செல்லும் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments