டேனிக்ஸ் அதிகாரிகள் இருவருக்கு முழு ஊதியம் அளிக்க நஜீப் ஜங் அறிவுறுத்தல்
உத்தரவைப் பின்பற்றவில்லை எனக் கூறி தில்லி அரசால் இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு டேனிக்ஸ் அதிகாரிகளுக்கு முழு ஊதியத்தையும் வழங்குமாறு அரசு தலைமைச்
உத்தரவைப் பின்பற்றவில்லை எனக் கூறி தில்லி அரசால் இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு டேனிக்ஸ் அதிகாரிகளுக்கு முழு ஊதியத்தையும் வழங்குமாறு அரசு தலைமைச்
செயலர் கே.கே.சர்மாவுக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
தில்லி உள் துறையைச் சேர்ந்த டேனிக்ஸ் அதிகாரிகள் யாஷ்பால் கர்க், சுபாஷ் சந்திரா ஆகியோரை இடைநீக்கம் செய்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகாது என்று மத்திய உள்துறை அறிவித்துள்ளதால், சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளுக்கு முழு ஊதியத்தையும் அளிக்குமாறு தலைமைச் செயலர் கே.கே.சர்மாவுக்கு துணை நிலை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக தலைமைச் செயலருக்கு நஜீப் ஜங் கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த அறிவுறுத்தல்கள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கூறியிருந்தார்.
சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி அமைச்சரவை பிறப்பித்த உத்தரவை பின்பற்றாததாகக் கூறி யஷ்பால் கர்க், சுபாஷ் சந்திரா ஆகிய இரு டேனிக்ஸ்
அதிகாரிகளை இடைநீக்கம் செய்து தில்லி அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனிடையே, அந்த இரு அதிகாரிகளுக்கான பிப்ரவரி மாத ஊதியத்தில் பாதியை தில்லி அரசு பிடித்தம் செய்த நிலையில் துணைநிலை ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.