FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேஜிரிவாலுக்கு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து: கொண்டாட்டத்தை தவிர்க்க முதல்வர் வேண்டுகோள்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் 50-ஆவது பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தில்லி துணை

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் 50-ஆவது பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜால் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நலம் குன்றிய காரணத்தால் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறும், தனது இல்லத்துக்கு வர வேண்டாம் எனவும் ஆம் ஆத்மி கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் கேஜிரிவால் கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரையில் வியாழக்கிழமை இட்டுள்ள பதிவு: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து முதல்வர் கேஜரிவால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு சுட்டுரையில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தனது இல்லதுத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த கட்சித் தொண்டர்களிடம் கேரள வெள்ள நிவாரணத்துக்கு நன்கொடை அளிக்கவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயை பார்க்கவும் தன்னை அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
துணைநிலை ஆளுநர்: முதல்வர் கேஜரிவாலுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சுட்டுரையில் இட்டுள்ள பதிவில், "தில்லி முதல்வருக்கு பிறந்நநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலமும், நீண்ட ஆயுளும் பெறுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார். 
துணைநிலை ஆளுநரின் வாழ்த்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால்தனது சுட்டுரையில் "நன்றி அய்யா'எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல, அரவிந்த் கேஜரிவாலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் தங்களது சுட்டுரை வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments