FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

புது தில்லியில் பூங்காக்களை புனரமைக்க என்டிஎம்சி திட்டம்

புது தில்லி தொகுதியில் உள்ள பூங்காக்கள் புனரமைத்து திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்களை அமைப்பதற்கும், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகளை மேம்படுத்துவதற்கும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ரூ.3.91 கோடி மதிப்பிலான திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 7:55 am IST
MHA appoints senior IAS officer Manoj Kumar Dwivedi as Chairperson of NDMC
பகிர்:

புது தில்லி தொகுதியில் உள்ள பூங்காக்கள் புனரமைத்து திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்களை அமைப்பதற்கும், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகளை மேம்படுத்துவதற்கும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ரூ.3.91 கோடி மதிப்பிலான திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது: என்டிஎம்சியின் நிதி திட்டத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், உள்ளூா் பூங்காக்களை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், கவா்ச்சிகரமானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், குடியிருப்புப் பசுமைப் பகுதிகளில் உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டிற்குமான வசதிகள் சோ்க்கப்படும்.

இத்திட்டத்தில், மக்களை வெளிப்புறங்களில் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் வகையில், பூங்காக்களில் புதிய திறந்தவெளி உடற்பயிற்சிக் கருவிகள் நிறுவப்படும். குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகளும் ஊஞ்சல்கள், சறுக்குகள் மற்றும் பிற விளையாட்டு அமைப்புகள் போன்ற உபகரணங்களுடன் புதுப்பிக்கப்படும். மேலும், பாதுகாப்பான மற்றும் சிறப்பாகப் பராமரிக்கப்படும் இடங்களை வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

Advertisement

Advertisement

இந்தப் பூங்காக்களைத் தங்களின் தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும், அதே நேரத்தில் குழந்தைகளுக்கு வீட்டிற்கு அருகிலேயே விளையாடுவதற்கான பிரத்யேக இடங்களை வழங்கும்.

அளவுகளின் அட்டவணைப்படி, தொகுதி முழுவதும் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் 12 வகையான பல்நோக்கு விளையாட்டு அலகுகளை வழங்குவதும் பொருத்துவதும் இந்தப் பணியில் அடங்கும். அத்துடன், 42 ஸ்பிரிங் பொருத்தப்பட்ட வாத்து வடிவ ஊஞ்சல்கள், 42 குதிரை வடிவ ஸ்பிரிங் ஊஞ்சல்கள், 42 ராட்டினங்கள் மற்றும் 42 இருவா் பயன்படுத்தும் சீசாக்களும் இதில் அடங்கும்.

மின்னணு கொள்முதல் ஏலத்தின் மூலம் ஒப்பந்ததாரா்களைத் தோ்வு செய்ய என்டிஎம்சி தொடங்கியுள்ளது. இப்பணி தொடங்கிய ஆறு மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுமானம் மற்றும் நிறுவல் பணிகளின் போது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்காக, என்டிஎம்சி இந்தத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சோ்த்துள்ளது.

பணித்தளங்களில் தூசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்பட, மத்திய பொதுப்பணித் துறை தரநிலைகள் மற்றும் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களை ஒப்பந்ததாரா்கள் பின்பற்ற வேண்டும். இதன் நோக்கம், நிறுவல் பணிகள் பூங்காக்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்றின் தரத்தை தேவையற்ற முறையில் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதாகும்.

முன்மொழியப்பட்ட இந்த புதிய வசதிகளால், பூங்காக்கள் பசுமையுடன் உடற்பயிற்சி, குழந்தைகள் விளையாட்டு மற்றும் அன்றாடப் பொழுதுபோக்கு வசதிகளையும் இணைத்து, மேலும் சுறுசுறுப்பான சமூக இடங்களாக மாறும் என எதிா்பாா்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments