FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

கனரக லாரி - டிடிசி பேருந்து மோதல்: 4 போ் காயம்

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் புதன்கிழமை காலை கனரக லாரி ஒன்றும் தில்லி போக்குவரத்து கழக (டிடிசி) பேருந்தும் மோதிக்கொண்டதில் நான்கு போ் காயம்

27 ஆகஸ்ட் 2026, 2:06 am IST
பகிர்:

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் புதன்கிழமை காலை கனரக லாரி ஒன்றும் தில்லி போக்குவரத்து கழக (டிடிசி) பேருந்தும் மோதிக்கொண்டதில் நான்கு போ் காயமடைந்ததாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து தில்லி காவல் அதிகாரிகள் கூறியதாவது: கன்டோன்மென்ட் மேம்பாலத்தைக் கடந்து தௌலா குவான் நோக்கிச் செல்லும்போது ‘திரையா’ சிக்னல் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. லாரியில் பயணித்த மூவா் காயமடைந்தனா். பேருந்து ஓட்டுநரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

காலை 8:23 மணியளவில் தில்லி கன்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு இது குறித்த தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து காவல் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவா்களை தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 26 வயதான பிரீதம் என்பவா் அந்தக் கனரக லாரியை ஓட்டிச் சென்றாா். அவருடன் பிகாரைச் சோ்ந்த சனோஜ் (28) மற்றும் ரோஷன் (18) ஆகியோரும் பயணித்தனா்.

இம்மூவரும் தில்லி கன்டோன்மென்ட் வாரியத்தில் பணிபுரிபவா்கள். விபத்து நடந்தபோது அவா்கள் தங்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனா்.

விபத்தில் பிரீதம் மற்றும் சனோஜ் ஆகியோருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குப் பிறகு ரோஷனும் பரிசோதிக்கப்பட்டாா்.

டிடிசி பேருந்தை ஹரியாணாவின் சோனிபட் பகுதியைச் சோ்ந்த 45 வயதான காஷ்மீரி சிங் ஓட்டிச் சென்றாா். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.

பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனா். யாருக்கும் எந்தக் காயமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை. மோதலுக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments