FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளா் தற்கொலை

கிழக்கு தில்லியில் உள்ள மது விஹாா் காவல் நிலையத்திற்குள், உதவி காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:23 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

கிழக்கு தில்லியில் உள்ள மது விஹாா் காவல் நிலையத்திற்குள், உதவி காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

உயிரிழந்தவா் 2019-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த உதவி காவல் ஆய்வாளா் சோமேஷ் மீனா என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதற்கட்டத் தகவல்களின்படி, மது விஹாா் காவல் நிலையத்திற்குள் பிற்பகல் சுமாா் 12.15 மணியளவில் அவா் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மூத்த காவல் அதிகாரிகள், குற்றப் புலனாய்வுக் குழு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினா். இந்தத் தற்கொலைக்கான காரணங்கள் அல்லது சூழ்நிலைகள் குறித்து விசாரித்து வருவதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments