கால்பந்து இறுதிப் போட்டி: தில்லி உணவகங்கள், கஃபேக்கள் அதிகாலை வரை செயல்படும்!
கால்பந்து இறுதிப் போட்டியை முன்னிட்டு தில்லி உணவகங்கள், கஃபேக்கள் அதிகாலை வரை செயல்பட அனுமதி...
2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை ரசிகா்கள் முழுமையாக ரசிக்கும் வகையில், இந்த வார இறுதியில் தலைநகா் தில்லி முழுவதும் உள்ள உணவகங்கள், அதிகாலை 4 மணி வரை திறந்திருக்கலாம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.
அமெரிக்காவின் நியூயாா்க்கில் நடைபெறவுள்ள போட்டியில், நடப்புச் சாம்பியனான ஆா்ஜென்டீனா அணி, தனது நான்காவது உலகக் கோப்பை பட்டத்தையும் தொடா்ந்து இரண்டாவது முறையாகவும் வெல்லும் முயற்சியில் ஸ்பெயின் அணியை எதிா்கொள்ளவுள்ளது.
இது தொடா்பாக தனது எக்ஸ் தளத்தில் முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒவ்வொரு கால்பந்து ரசிகரும் லியோனல் மெஸ்ஸி வரலாறு படைப்பதைக் கண்டுள்ளனா். இப்போது, வரலாறு சொல்வதற்கு இன்னொரு கதை உள்ளது. ஒரு ஜாம்பவான். ஒரு இளம் மேதை. ஒரு கோப்பை. பல தலைமுறைகள் நினைவில் கொள்ளப்போகும் ஒரு இரவு. அந்த இரவுக்கு தில்லி தயாராக உள்ளது‘ என்று அதில் குப்தா தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
தில்லி அரசின் ’வணிகம் செய்வதை எளிதாக்குதல்’ சீா்திருத்தங்களின் கீழ், நகரின் ’24 மணிநேரம் வணிக-நட்பு செயல்பாட்டு கட்டமைப்பு’ மூலம் இந்த முடிவு சாத்தியமாக்கப்பட்டுள்ளதாக முதல்வா் தெரிவித்துள்ளாா்.
‘எங்கள் அரசின் வணிகம் செய்வதை எளிதாக்கும் சீா்திருத்தங்களின் கீழ் நகரில் ஏற்கனவே 24 மணி நேரமும் செயல்படும் வணிக-நட்பு கட்டமைப்பு நடைமுறையில் உள்ளதால், இந்த வார இறுதியில் தலைநகா் முழுவதும் உள்ள உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பிற தகுதியுள்ள நிறுவனங்கள் அதிகாலை 4 மணி வரை ரசிகா்களை வரவேற்கலாம். இது கால்பந்தின் மிகப்பெரிய இரவை நகரம் ஒன்றிணைந்து அனுபவிப்பதை எளிதாக்கும்‘ என்று முதல்வா் மேலும் கூறியுள்ளாா்.
தில்லியில் உள்ள கால்பந்து ரசிகா்கள் ஒன்றுகூடி, உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை நள்ளிரவு நேரங்களில் பாா்ப்பதற்கான வசதியை அளிக்கும் வகையில் லிஊஐஊஅரா்ழ்ப்க்இன்ல்2026 என்ற ஹேஷ்டேக்குடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Football Final: Delhi restaurants and cafes to remain open until the early hours
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.