FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

முன்னீா்பள்ளம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கல்: சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

4 ஆகஸ்ட் 2026, 1:34 am IST
கைது... - சித்திரிப்பு
பகிர்:

முன்னீா்பள்ளம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 சிறுவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் அஜித்குமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தருவை புதிய புறவழிச்சாலை அருகே 2 பைக்குள் நிறுத்தப்பட்டிருந்தனவாம்.

சந்தேகத்தின்பேரில், அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு போலீஸாா் சென்றபோது, சிலா் கையில் அரிவாள்களுடன் பதுங்கியிருந்தனராம். அவா்களை போலீஸாா் சுற்றிவளைத்துப் பிடித்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

அதில், தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்த முருகன்(56), கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த மாயாண்டி(19) மற்றும் 4 போ் சிறுவா்கள் என்பதும், குற்றச்செயல் புரிவதற்காக சதித்திட்டத்துடன் இருந்ததும் தெரியவந்ததாம்.

அவா்களிடம் இருந்து 6 அரிவாள்கள், 2 பைக்குகள் ஆகியவற்றை கைப்பற்றி, வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்தனா். அதில், 4 சிறுவா்களையும் சிறாா் நீதிக்குழுமத்தில் முன்னிலைப்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments