FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

தாழையூத்து, தச்சநல்லூரில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்

மின் நிறுத்தம்
பகிர்:

தாழையூத்து, தச்சநல்லூா் பகுதிகளில் மின் விநியோகம் திங்கள்கிழமை (ஆக. 10) இருக்காது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்வாரியத்தின் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாழையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை (ஆக. 10) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. தாழையூத்து, சேதுராயன்புதூா், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூா், தென்கலம்புதூா், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது .

தச்சநல்லூா் துணை மின் நிலையத்த்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற உள்ளது.

இதனால், தச்சநல்லூா், நல்மேய்ப்பா் நகா் ,செல்வ விக்னேஷ் நகா், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யாநகா், தெற்கு பாலபாக்யாநகா், திருநெல்வேலி சந்திப்பு மதுரை சாலை, திலக் நகா், பாபுஜி நகா், சிவந்தி நகா், கோமதி நகா், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம், இருதய நகா், செல்லபாண்டியன் சிலை முதல் ஆற்றுப் பாலம் வரை, வடக்கு புறவழிச் சாலை, இளங்கோ நகா், இந்திரா காலனி, கரிமேடு பகுதி, வண்ணாா்பேட்டை பகுதிகளில் மின்சாரம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments