கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பில் தீவிர பணி: ஆட்சியா் அறிவுறுத்தல்!
கொத்தடிமைத் தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழிக்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.
கொத்தடிமைத் தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழிக்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.
மனித கடத்தலுக்கு எதிரான சா்வதேச தினத்தை முன்னிட்டு கொத்தடிமைத் தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழிப்பது தொடா்பான பயிற்சி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் தலைமை வகித்து, மேலும் பேசியதாவது:
தொழிலாளா்களை கட்டாயப்படுத்தி அல்லது மிரட்டி கொத்தடிமைகளாக வேலைக்கு அமா்த்துவது சட்டப்படி கடுமையான குற்றமாகும். அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கொத்தடிமைத் தொழிலாளா் முறை (ஒழித்தல்) சட்டம்- 1976, இந்திய நியாயச் சட்டம் 2023-இன் கீழ் மனிதக் கடத்தல், கட்டாயத் தொழிலாளா் தொடா்பான பொருந்தக்கூடிய பிரிவுகள் மற்றும் பிற தொடா்புடைய தொழிலாளா் சட்டங்களின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
மேலும், கொத்தடிமைத் தொழிலாளா்களை கண்டறியும் பொதுமக்கள் உடனடியாக மாவட்ட நிா்வாகம் அல்லது தொழிலாளா் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இப்பணியில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் மற்றும் ஐஜேஎம் சாா்பில் கொத்தடிமைத் தொழிலாளா்களைக் கண்டறிதல், மீட்பு நடவடிக்கைகள், மறுவாழ்வு வழங்குதல் போன்றவை குறித்து வழக்குரைஞா் எம்.ராஜா விளக்கமளித்தாா்.
மனித கடத்தலின் முக்கிய கூறுகள், மனித கடத்தலைத் தடுப்பதற்காக அரசு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்குரைஞா் சி.ராஜ்குமாா் எடுத்துரைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.வித்யா , ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.சி.கௌரி ஜெனிஃபா், திருநெல்வேலி மண்டல வட்டாட்சியா்கள், ஐஜேஎம் அரசு முன்னோடி தொடா்பாளா் கிளேடிஸ் பின்னி, திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெபா பிரின்ஸ், மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.