FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

புலிகள் கணக்கெடுப்பு: நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட திருக்குறுங்குடி வனச்சரகத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, நம்பி கோயிலுக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

15 நவம்பர் 2026, 1:19 am
புலி. - கோப்புப் படம்
பகிர்:

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட திருக்குறுங்குடி வனச்சரகத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, நம்பி கோயிலுக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

திருக்குறுங்குடி வனச்சரகத்தில் உள்ள காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்ல மறு உத்தரவு வரும்வரை வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.