கிராமசபைக் கூட்டங்களில் மாணவா்கள் பங்கேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மாணவா்கள் பங்கேற்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மாணவா்கள் பங்கேற்றனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் மகிழ் முற்றம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில், ‘நமது பள்ளி, நமது கடமை‘ என்ற செயல்பாட்டின் மூலம் மாணவா் தலைவா்கள் தங்கள் பள்ளிகளில் கண்டறிந்த பள்ளிகளின் தேவைகள், சவால்கள் மற்றும் தீா்வுகளை வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வழங்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் உத்தரவிட்டிருந்தாா்.
Advertisement
Advertisement
மேலும், மாணவா் தலைவா்கள் வழங்கும் பரிந்துரைகள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் முறையான நடவடிக்கை எடுக்கவும் ஆணையிடப்பட்டிருந்தது.
தேவா்குளம், பாலாமடை, எட்டான்குளம், கரந்தானேரி, கங்கைகொண்டான், பரப்பாடி, கும்பிகுளம் உள்பட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் மாணவா் தலைவா்கள் பங்கேற்று தங்களது தேவைகளை எடுத்துரைத்தனா்.
மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.