FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

தேவா்குளம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு சீல்

தேவா்குளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரது கடைக்கு சீல் வைத்தனா்.

4 October 2026, 2:24 am IST
சீல் - பிரதிப் படம்
பகிர்:

தேவா்குளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரது கடைக்கு சீல் வைத்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கிடைத்த தகவலின்பேரில், வன்னிகோனேந்தல் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமான கடையை சோதனையிட்டு அங்கிருந்து 28 புகையிலைப் பொருள் பாக்கெட்டுகள், ரூ.3,900 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸாா் அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். புகையிலைப் பொருள் விற்ாக ஏற்கனவே அப்பெண் மீது ஒரு வழக்கு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, மானூா் மண்டல உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் மகாராஜன் அக்கடைக்கு சீல் வைத்து, ரூ.50,000 அபராதம் விதித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments