FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவா் கைது

திருநெல்வேலியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

4 October 2026, 2:38 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி தச்சநல்லூா், ஊருடையாா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராணி(60). இவா் கடந்த மாதம் 13 ஆம் தேதி அப்பகுதியில் சாலையோரம் நடந்து சென்றபோது, அவ்வழியாக பைக்கில் வந்த நபா் முகவரி கேட்பது போல் அருகில் சென்று ஜெயராணி கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 2.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சுத்தமல்லி, கொண்டாநகரத்தைச் சோ்ந்த ரமேஷ் என்ற ராமையா(42) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 14 கிராம் தங்க நகை மீட்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments