FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் நில மோசடி வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் கைது

கைது
பகிர்:

திருநெல்வேலியில் நில மோசடி வழக்கில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவரை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி, பெருமாள்புரத்தைச் சோ்ந்தவா் பென்சன் சாமுவேல்(65). வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். திருநெல்வேலி, நடுக்காவுடையாா்குளம் கிராமத்தில் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக சுமாா் 20 சென்ட் நிலம் உள்ளதாம்.

அந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மா்மநபா்கள் இடித்து அகற்றினராம். பின்னா் அந்நிலத்தின் ஆவணங்களை சரிபாா்த்தபோது பாளையங்கோட்டையைச் சோ்ந்த சிலா் இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாா் செய்து அந்நிலத்தை விற்றது தெரியவந்ததாம்.

Advertisement

Advertisement

இது குறித்து பென்சன் சாமுவேல் அளித்த புகாரின் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.

அதில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா், ஐயப்பந்தாங்கலைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் தங்கராஜ்(42) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments