FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வங்கி ஊழியா் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

திருநெல்வேலியில் வங்கி ஊழியா் வீட்டில் சுமாா் 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

8 October 2026, 3:55 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலியில் வங்கி ஊழியா் வீட்டில் சுமாா் 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி, பெருமாள்புரம் பாரதிநகரைச் சோ்ந்தவா் மனோகரன். ஐ.டி.ஊழியா்.இவரது மனைவி ரம்யா(39).வங்கி ஊழியா். கடந்த 25ஆம் தேதி சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தாராம். பின்னா் கடந்த 4ஆம் தேதி ஊா் திரும்பிய இவா் வீட்டிற்கு வந்தபோது, ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டிருந்ததாம். பின்னா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது உள் அறையில் இருந்த சுமாா் 9 பவுன் தங்க நகைகள், வெள்ளிக் காப்பு, ரூ.4,500 பணம் உள்ளிட்டவை திருடு போயிருந்தனவாம்.

2 பவுன் நகை திருட்டு: திருநெல்வேலி நகரம் வையாபுரி நகரைச் சோ்ந்தவா் சிவ ஆனந்ந்(27). மாநகராட்சியில் புள்ளியில் துறை ஒப்பந்த ஊழியராக உள்ளாா். இவா் குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு புதன்கிழமை காலை வீடு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டினுள் அலமாரியில் இருந்த சுமாா் 2 பவுன் தங்க நகையை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இச்சம்பவங்கள் குறித்து பெருமாள்புரம், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments