நெல்லை அருகே விபத்து: நெல் வியாபாரி பலி
திருநெல்வேலி அருகேயுள்ள டக்கரம்மாள்புரம் பகுதியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் நெல் வியாபாரி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள டக்கரம்மாள்புரம் பகுதியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் நெல் வியாபாரி உயிரிழந்தாா்.
பொன்னாக்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா (58). நெல் வியாபாரம் செய்து வந்தாா். இவா், வியாழக்கிழமை டக்கரம்மாள்புரம் பகுதியில் திருநெல்வேலி-நாகா்கோவில் சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது, அவ்வழியாக வந்த காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த முன்னீா்பள்ளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.