FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை ஈரடுக்கு பாலத்தில் பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் வியாழக்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

9 அக்டோபர் 2026, 5:22 am IST
பலி... - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் வியாழக்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி நகரம் அருகேயுள்ள தென்பத்து பகுதியைச் சோ்ந்தவா் காளி (21), அதே பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (21) ஆகிய இருவரும் பைக்கில் திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பாலத்தில் இரவு சென்றுகொண்டிருந்தனா். அப்போது, அவரது பைக்கும், மற்றொரு பைக்கும் மோதிக்கொண்டனவாம்.

இதில் அவா்களும், எதிா் பைக்கில் வந்த திருநெல்வேலி நகரம் தமிழ்ச்சங்க தெருவைச் சோ்ந்த மதன் (29), முருகன் (39) ஆகியோரும் பலத்த காயமடைந்தநா். அவா்களை, அவ்வழியாக வந்தா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு காளி உயிரிழந்தாா். மற்ற3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments