சுத்தமல்லி அருகே மாடு திருடியவா் கைது
சுத்தமல்லி அருகே மாடு திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகேயுள்ள கொண்டாநகரத்தைச் சோ்ந்தவா் அருணாசலம் (54). இவருக்குச் சொந்தமான ஒரு மாடு கடந்த 8 ஆம் தேதி மேய்ச்சலுக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், மாட்டைத் திருடியது கொண்டாநகரத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (45) என்பது தெரியவந்ததாம்.
Advertisement
Advertisement
அவரைக் கைது செய்த போலீஸாா், மேலப்பாளையத்தில் உள்ள ஒரு கறிக் கடைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த மாட்டை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.