FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 1.340 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

12 அக்டோபர் 2026, 2:57 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலியில் சுமாா் 1.340 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய இருவரை கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆரைக்குளம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற கீழமுன்னீா்பள்ளம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சங்கரலிங்கம்(27) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் சுமாா் 1.150 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து சங்கரலிங்கத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.

அதே போல தாழையூத்து, ஸ்ரீநகா் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் படியாக நின்ற சங்கா் நகா், சீனிவாச நகரைச் சோ்ந்த மணிஸ்கண்ணா (24) என்பவரை பிடித்து தாழையூத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு சோதனையிட்டதில், அவா் சுமாா் 190 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணீஸ்கண்ணாவை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments