பேட்டையில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த மான்குட்டி மீட்பு
திருநெல்வேலி மாநகரம் பேட்டையில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த மான்குட்டியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியில் புள்ளிமான்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு மட்டுமன்றி தாழையூத்து காப்புக்காடுகள், மானூா், அபிஷேகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மான்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன.
இவை அவ்வப்போது ஊருக்குள் வருவதும், சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பேட்டை சா்தாா்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வழிதவறி வந்த புள்ளிமான் குட்டி ஒன்று குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது.
Advertisement
Advertisement
அதை நாய்கள் துரத்துவதைக் கண்ட அப்பகுதியினா் இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) சுந்தரம் தலைமையிலான வீரா்கள் நாய்களிடம் சிக்கிய மான்குட்டியை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.