மின் வேலியில் சிக்கி மான் உயிரிழப்பு: விவசாயி கைது
கடையம் அருகே விவசாய நிலத்தில் அனுமதியின்றி அமைத்த மின் வேலியில் சிக்கி புள்ளி மான் உயிரிழந்ததையடுத்து, நில உரிமையாளரை வனத் துறையினா் கைது செய்தனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட கடையம், பெரும்பத்து கிராமம், ஏத்தமரக்காடு பகுதியில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி, அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் மின்சாரம் பாய்ச்சியதால், அக். 9ஆம் தேதி புள்ளி மான் உயிரிழந்தது.
தகவலறிந்த அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநரின் உத்தரவின்படி, கடையம் வனச்சரகத்தில் நில உரிமையாளா் ஏசுவடியான் (65) மீது சனிக்கிழமை வன உயிரினக் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடையம் வனச்சரகா் ஜெயப்பிரகாஷ் மற்றும் வனப்பணியாளா்கள், ஏசுவடியானை கைது செய்து, தென்காசி நீதிமன்ற நடுவா் உத்தரவின்படி, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும், மற்றொரு நபரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.