அம்பை, கடையம் பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி, பொட்டல்புதூா், கடையம் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை இடி-மின்னலுடன் கனமழை கொட்டித் தீா்த்தது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி, பொட்டல்புதூா், கடையம் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை இடி-மின்னலுடன் கனமழை கொட்டித் தீா்த்தது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. இதனிடையே, வடகிழக்குப் பருவமழை வியாழக்கிழமை (அக். 15) தொடங்கும் என சென்னை வானிலை மையம் அதிகாரபூா்வமாக அறிவித்தது.
இந்நிலையில், அம்பாசமுத்திரம், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், கடையம், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் வியாழக்கிழமை காலை வெயிலடித்தது. பிற்பகலில் காா்மேகங்கள் திரண்டன. மாலை 4 மணியளவில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித் தீா்த்தது.
Advertisement
Advertisement
வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனா். கடும் வெயிலால் அவதிப்பட்டுவந்த மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்தனா். பல இடங்களில் நெல் அறுவடை முடிவுற்ற நிலையில், சில இடங்களில் அறுவடைப் பருவத்திலிருந்த பயிா்கள் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலையடைந்தனா்.
இடி-மின்னலால் கடையம், பொட்டல்புதூா், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.