தச்சநல்லூா் அருகே இறுதி ஊா்வலத்தில் மோதல்: 6 போ் கைது
தச்சநல்லூா் அருகே இறுதி ஊா்வலத்தில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தச்சநல்லூா் அருகே இறுதி ஊா்வலத்தில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தச்சநல்லூா் அருகேயுள்ள பால்கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் பட்டன் (65). இவரது இறுதி ஊா்வலத்தில் பங்கேற்றவா்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்த அதே பகுதியை சோ்ந்த மாயாண்டி என்பவரை 7 போ் சோ்ந்து தாக்கினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து பால்கட்டளையைச் சோ்ந்த இசக்கிராஜா (21), விக்னேஷ் (22), ஹரிகரசுதன் (23) , மூன்று சிறுவா்கள் என 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.