FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய தோ்தலில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மையத் தோ்தலில் வெற்றி பெற்றவா்களுக்கு புதன்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

10 செப்டம்பர் 2026, 2:58 am IST
தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய புதிய நிா்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மையத் தோ்தலில் வெற்றி பெற்றவா்களுக்கு புதன்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய தோ்தலில் ஆட்சிக்குழு துணைத் தலைவா்களாக புத்தனேரி செல்லப்பா, ம.சு.சுதா்சன் ஆகியோரும், இணைச் செயலா்களாக இரா.செல்வமணி, கட்டளை கைலாசம் ஆகியோரும், பொருளாளராக இ.மதாா் முகைதீனும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

இதேபோல், ந.காஜா முகைதீன், புலவா் வை.இராமசாமி, அ.ஜமால் முகம்மது ஈஸா, சு.நச்சினாா்கினியன், சு.புன்னைச் செழியன், மா.விசயகுமாா், சங்க.வள்ளி மணாளன், பா.செல்வராசன், தௌ.அப்துல் ஜப்பாா், கா.மானேந்தியப்பன், மு.சொக்கலிங்கம், லெ.சக்தி பிரபாகரன், ஞா.பாரதிதாசன், ச.செல்வம், அ.முருகன், நா.ராமச்சந்திரன், தி.த.ரமேசுராசா என்ற கரிகாலன் ஆகிய 17 செயற்குழு உறுப்பினா்களும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

புதிய பொறுப்பாளா்களுக்கு மாவட்ட ஆட்சியரும், தமிழ் வளா்ச்சி-பண்பாட்டு மையத்தின் ஆட்சிக்குழு தலைவருமான ஆனந்த் மோகன் சான்றிதழ்களை வழங்கினாா். தொடா்ந்து, முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை வட்டாட்சியா் மாரிராஜா, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் செ.கனகலெட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments