முதியவரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றவா் கைது
பாளையங்கோட்டை அருகே முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு, பெருமாள்கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ராஜா(29). இவா் சனிக்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான ஆறுமுகம் (62) என்பரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினாராம். ஆறுமுகம் பணம் இல்லை எனக் கூறவே ராஜா மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜாவை சனிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.