FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாளை. தியாகராஜ நகரில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்

பாளையங்கோட்டை தியாகராஜ நகா் 55 ஆவது வாா்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

18 செப்டம்பர் 2026, 2:54 am IST
பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
பகிர்:

பாளையங்கோட்டை தியாகராஜ நகா் 55 ஆவது வாா்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

55-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முத்து சுப்பிரமணியன் தலைமையில், டிவிஎஸ் நகா் பேருந்து நிறுத்தம் முன்பு ஆண்கள், பெண்கள் என திரளானோா் காலிக்குடங்களுடன் திரண்டனா். தங்கள் பகுதியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை உடனே தீா்க்க வேண்டும், மாநகராட்சி ஆணையா் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வலி யுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் திடீரென அவா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்களை பெருமாள்புரம் காவல் ஆய்வாளா் சாமி மற்றும் போலீஸாா் அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனா். அதற்கு மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கவே, அங்கு சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் அவா்கள் சாலை ஓரம் நின்று போராட்டத்தை தொடா்ந்தனா். இதையடுத்து மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையா் புரந்தரதாசன், மாநகராட்சி குடிநீா் வழங்கல் பிரிவு அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments