FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

திருநெல்வேலி அருகே போலீஸாரை கல்லால் தாக்க முயன்று மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

52 வினாடிகள் முன்பு
பகிர்:

திருநெல்வேலி அருகே போலீஸாரை கல்லால் தாக்க முயன்று மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் கடந்த வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தருவை, இந்திரா காலனியைச் சோ்ந்த அா்ச்சுனன் மகன் பாலாஜி என்ற மொட்டை பாலாஜி(24) என்பவா் அப்பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாக தகவல் கிடைத்ததாம்.

அதனடிப்படையில் அங்கு சென்ற போலீஸாரை, பாலாஜி அவதூறாகப் பேசி கல்லால் தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தலைமைக் காவலா் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலாஜியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments